Latestமலேசியா

திரங்கானுவில் குரங்குகளை விரட்டுவதற்காக விஷம் கலக்கப்பட்ட பிஸ்கட்டை சாப்பிட்ட பையன் தெய்வாதீனமாக உயிர் தப்பினான்

கெமாமான், ஜூலை-15, நாட்டில் ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவமாக, திரங்கானு, கெமாமானில் விஷம் கலக்கப்பட்ட பிஸ்கட்டைச் சாப்பிட்டு 13 வயது பையன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

கம்போங் டாடோங்கில் (Kampung Dadong) வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

சம்பவத்திற்கு முன்பாக மீன்பிடிப்பதற்காக வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள வாழைத் தோட்டத்துக்கு நண்பனுடன் அவன் சென்றுள்ளான்.

அங்கு குரங்குகளை விரட்டுவதற்காக விஷம் கலக்கப்பட்டு கட்டையொன்றில் தொங்க விடப்பட்டிருந்த பிஸ்கட்டுகளில் ஒன்றை அவன் தெரியாமல் எடுத்து சாப்பிட்டுள்ளான்.

சாப்பிட்ட வேகத்தில் மயங்கி விழுந்தவனை, தகவலறிந்த பெற்றோர் அருகிலுள்ள கிளினிக்கிற்குக் கொண்டுச் சென்றனர்.

பிறகு அங்கிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தனது மகனின் உடல் நிலை தேறி வருவதாக அவனது தந்தை சொன்னார்.

அச்சம்பவம் 2001 சிறார் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக கெமாமான் போலீஸ் கூறியது.

கடந்த வாரம் கெடா, கூலிமில் நிகழ்ந்த இதே போன்றதொரு சம்பவத்தில், எலி பாசானம் கலக்கப்பட்ட கெரோப்போக் (Keropok) உண்டதால், சகோதரர்களான 2 சிறுவர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!