Latestஇந்தியா

திருட்டுப் பயம்: காரை வீட்டின் மாடியில் நிறுத்திய பீகார் நபர்

பீகார், செப் 9 – வெளிநாட்டுக்குச் செல்லவிருந்த ஒருவர், தனது காரை திருட்டிலிருந்து பாதுகாக்க எடுத்த வித்தியாசமான முயற்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

Mahindra Scorpio காரை வீட்டின் முன்புறமோ, வாகன நிறுத்துமிடத்திலோ விடாமல், கிரேன் உதவியுடன் வீட்டின் மாடிக்கு தூக்கிச் சென்று நிறுத்தியுள்ளார் அந்த ஆடவர்.

வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகியிருந்த அவர், நீண்ட நாட்களுக்கு காரை கீழே நிறுத்திவிட்டுச் செல்வது பாதுகாப்பானதாக இருக்காது என அஞ்சியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிரேன் மூலம் காரை மாடிக்கு உயர்த்தும் காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

இந்த வித்தியாசமான ‘பார்க்கிங்’ முறையைப் பார்த்த இணையவாசிகள் பலரும் ஆச்சரியத்துடனும் நகைச்சுவையுடனும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும், கார் உரிமையாளரின் அடையாளம் உள்ளிட்ட சில விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!