Latestமலேசியா

திரும்பும்போது சிக்னல் போடத் தவறிய கார் மோதியதில் பெண் மரணம்; ஓட்டுனருக்கு RM10,000 அபராதம்

கோலாலம்பூர், ஆக 9 – திரும்பும்போது தனது காரின் சிக்னல் போடத் தவறியதால் சைக்கிளில் சென்ற பெண்ணை மோதி மரணம் ஏற்படுத்திய 39 வயது கார் ஓட்டுனருக்கு 10,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.

நான்கு ஆண்டுகளுக்கு முன் தனது Ford Ranger கார் ஓட்டியபோது ரோபிஸ்லான் யூனுஸ் ( Rofizlan Yunus) என்பவர் கவனமின்றி கார் ஓட்டிய குற்றத்திற்காக இந்த அபராத தொகையை விதிப்பதாக பேராக், செலாமா மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி R. பிரபாகரன் தீர்ப்பளித்தார். மேலும் இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி ரோபிஸ்லானுக்கு அவர் உத்தரவிட்டார்.

Jalan Lampin 3க்கு அருகேயுள்ள சாலை சந்திப்பில் ரோபிஸ்லானின் காருக்கு அருகே இடது புறம் நோர்ஹயாத்தி முகமட் யூசோப் (Norhayati Mohamed Yusof ) என்ற பெண் சைக்கிளில் நின்று கொண்டிருந்ததாகவும் காரின் சிக்னல் போடாமலேயே கார் ஓட்டுனர் திரும்பியதால் அவரது கார் சைக்கிளோட்டியை மோதியதாக அந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

சைக்கிளுடன் கீழே விழுந்த நோர்ஹயாத்தியின் மேல் காரின் இடதுபுற பின்டயர் ஏறியதால் கடுமையாக காயம் அடைந்த அவர் மரணம் அடைந்ததாக சவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர் கவனமின்றி கார் ஓட்டியது விபத்தை நேரில் பார்த்த சாட்சியின் மூலம் நிருபிக்கப்பட்டதால் கார் ஓட்டூனருக்கு அபராத தொகையை விதிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!