Latestமலேசியா

திவாலானோருக்கு மறுவாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் சுமார் 40,000 பேர் விடுவிப்பு

புத்ரா ஜெயா, ஏப்ரல்-3, அரசாங்கத்தின் இரண்டாவது வாய்ப்பு கொள்கையின் கீழ் பிப்ரவரி வரை சுமார் 40 ஆயிரம் பேர் திவாலில் இருந்து மீண்டு ‘மறுவாழ்வுப்’ பெற்றிருக்கின்றனர்.

தேசிய திவால் துறை MDI-யின் தலைமை இயக்குனர் M. Bakri Abd Majid அதனைத் தெரிவித்தார்.

அத்திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களுடான சந்திப்பின் போது, அரசின் அக்கொள்கை குறித்து பெருமகிழ்ச்சி தெரிவித்தனர்.

திவாலானோர் பட்டியலில் இருந்து விடுபட்டு புதியதொரு வாழ்க்கைக் கிடைத்திருப்பதைப் போன்று உணர்வதாக அவர்கள் நன்றியுடன் கூறியதாக M. Bakri சொன்னார்.

சிறு கடன்களுக்காக திவாலானோர் பட்டியலில் இருக்கும் மக்களை குறிப்பிட்ட சில நிபந்தனைகளுடன் அதிலிருந்து விடுவிப்பதே ஒற்றுமை அரசாங்கத்தின் இந்த இரண்டாம் வாய்ப்புக் கொள்கையாகும்.

அக்கொள்கையின் வாயிலாக, இவ்வாண்டு இறுதிக்குள் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் வரை
திவாலானோர் பட்டியலில் இருந்து விடுவிக்க அரசாங்கம் இலக்கு வைத்திருக்கிறது.

அவ்வெண்ணிக்கையானது, தற்போது நிலுவையில் உள்ள திவால் வழக்குகளில் 50% என்றார் அவர்.

திவாலானவர்களுக்கு மறு வாய்ப்பு வழங்கும் இக்கொள்கை, இவ்வாண்டு முதல் 2 லட்சம் ரிங்கிட் கடனைத் தாண்டாத 40 வயதுக்குக் கீழ்பட்டோருக்கும் விரிவுப்படுத்தப்படும் என, 2024 வரவு செலவு அறிக்கையை கடந்தாண்டு தாக்கல் செய்த போது பிரதமர் அறித்திருந்ததது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!