Latestமலேசியா

தீபகற்ப மலேசியாவில் இன்று முதல் டீசல் விலை லிட்டருக்கு 30 காசு குறைகிறது

புத்ராஜெயா, ஜூன்-18-தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை இன்று முதல் லிட்டருக்கு 30 காசுகள் குறைக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

​இதன்படி, ஒரு லிட்டர் 4 ரிங்கிட் 67 காசுகளாக விற்கப்படும் டீசல் விலை, இன்று முதல் 4 ரிங்கிட் 37 காசுகளாகக் குறையும்.

அதேவேளையில், கிழக்கு மலேசியாவில் மானிய விலையிலான டீசல் தொடர்ந்து 2 ரிங்கிட் 15 காசுகளாகவே நீடிக்கும்.

​இதர எரிபொருள் விலைகளைப் பொறுத்தமட்டில், RON97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரிங்கிட் 35 காசுகளாகவும், மானியமில்லாத RON95 பெட்ரோல் 3 ரிங்கிட் 72 காசுகளாகவும் எவ்வித மாற்றமுமின்றி தொடருகின்றன.

மேலும், BUDI95 திட்டத்தின் கீழ் உள்ள RON 95 பெட்ரோல் ஒரு லிட்டர் 1 ரிங்கிட் 99 சென்னாகவே நீடிக்கும்.

​இப்புதிய விலை மாற்றம் ஜூன் 24-ஆம் தேதி வரை அமுலில் இருக்கும்.

உலகளாவிய எரிபொருள் சந்தை நிச்சயமற்ற நிலையில் உள்ளதால், பொது மக்கள் தங்கள் பயணங்களைச் சரியாகத் திட்டமிட்டு தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு நிதியமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!