Latestமலேசியா

தீபாவளி குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்க, புத்தகம் வெளியிட்டுள்ள ஆசிரியர்கள்

தீபாவளி கொண்டாட்டம் குறித்து குழந்தைகளுக்கு கற்பிக்க, ஆரம்ப பள்ளி ஆசிரியர்களான முஹமட் கைருல் அஜ்மான் இஸ்மாயிலும், அவரது மனைவி ரசிசத்துல் அசிபா இஸ்மாயிலும், தங்கள் OwlyBooks பதிப்பகத்தின் கீழ், தீபாவளி வாழ்த்துகள் Owly! எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர்.

மலாய் மொழியில் அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முதன்மை கதாப்பாத்திரமான Owly, தீபாவளியை கொண்டாடும் வீடொன்றிற்கு செல்கிறார்.

அதன் வாயிலாக, தீபாவளியின் போது கடைப்பிடிக்கப்படும் பழக்க வழக்கங்கள் குறித்து, அறிந்து கொள்ளும் Owly-யை பின்பற்றி அப்புத்தகத்தை படிக்கும் பிள்ளைகளும், இந்தியர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை அறிந்து கொள்ள இயலும்.

சிறுவயதில், தமக்கு இருந்த பல்லின நண்பர்களுடன் பழகிய அனுபவத்தை கொண்டு, 48 வயது கைருல் அப்புத்தகத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

அந்த புத்தகத்தை முழுமையாக வடிவமைத்து வெளியிட கைருல் தம்பதியாருக்கு ஒரு மாதக் காலம் எடுத்ததாக கூறப்படுகிறது.

ஷா ஆலாமிலுள்ள, ஆரம்ப பள்ளி ஒன்றில் பணிப்புரியும் கைருல் தம்பதியினர், இதற்கு முன் ஹரி ராயா, சீனப் பெருநாள் கொண்டாட்டங்களை மையமாகவும் கொண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!