Latestமலேசியா

தீபாவளி விடுமுறைக் காலத்தில் உள்நாட்டில் சுற்றுலா தங்கும் விடுதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது

கோலாலம்பூர், நவ 16 – இவ்வாண்டு தீபாவளி பெருநாள் விடுமுறை காலத்தில் உள்நாட்டு சுற்றுலா வசதிக்கான ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் விருந்தினர்களின் எண்ணிக்கை அல்லது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. தங்கும் விடுதிகளில் 80 விழுக்காடு அறைகளில் விருந்தினர்கள் தங்கியிருந்தது உள்நாட்டு சுற்றுலா தொழில்துறைக்கு புத்துயிரூட்டுவதாக இருந்ததாக மலேசியா பட்ஜெட் மற்றும் வர்த்தக ஹோட்டல் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீ கணேஷ் மைக்கேல் தெரிவித்தார். தீபாவளியின் மூன்று நாள் விடுமுறை காலத்தில் பெரும்பாலான ஹோட்டல்களில் 80 விழுக்காடு அறைகளில் விருந்தினர்கள் தங்கியுள்ளனர். சில மாநிலங்களில் உள்ள தங்கும் விடுதிகளில் 70 விழுக்காட்டிற்கும் மேலான அறைகளில் விருந்தினர்கள் மற்றும் சுற்றுப்பயணிகள் தங்கியிருந்ததாக ஸ்ரீ கணேஷ் மைக்கேல் கூறினார்.

உதாரணத்திற்கு பினாங்கு, கேமரன் மலை, போட்டிக்சன் மற்றும் மலாக்காவில் உள்ள தங்கும் விடுதிகள் அல்லது ஹோட்டல்களில் தீபாவளி விடுமுறையில் அதிகமனோர் தங்கினர். தீபாவளிக்கு முன்னதாக சுற்றுப்பயணிகள் இன்றி வெறிச்சோடிக் கிடந்த லங்காவியில் உள்ள ஹோட்டல்களில்கூட தீபாவளி விடுமுறை காலத்தில் 70 விழுக்காட்டிற்கும் கூடுதலான அறைகளில் விருந்தினர்கள் அல்லது சுற்றுப்பயணிகள் தங்கியிருந்ததாக
ஸ்ரீ கணேஷ் மைக்கேல் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!