Latestமலேசியா

தெலுக் இந்தானில் கார் கவிழ்ந்ததில் ஓட்டுனர் கருகி மரணம்

தெலுக் இந்தான், மார்ச் 24 – தெலுக் இந்தானில் Kampung Ayaer Hitam-மிற்கு அருகே Jalan Changkat Jong – Bidor சாலையில் 23. 5ஆவது கிலோமீட்டரில் கார் ஒன்று கவிழ்ந்து தீப்பிடித்ததைத் தொடர்ந்து அக்கார் ஓட்டுனரான ஆடவர் ஒருவர் கருகி மாண்டார். நேற்றிரவு மணி 9.29 அளவில் தகவல் அறிந்ததைத் தொடர்ந்து உடனடியாக தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு சென்றதாக தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் மோஹட் இஸ்மாயில் தெரிவித்தார். தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றடைந்தபோது புரோடுவா மைவி காரில் தீ வேகமாக பரவியதால் அக்கார் 80 விழுக்காடு எரிந்தோடு அதன் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் கருகிய நிலையில் ஆடவரின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த ஓட்டுனரின் ஆவணங்களும் தீயில் அழிந்ததால் அவரைப் பற்றிய அடையாளம் இன்னும் கண்டறிய முடியவில்லையென மோஹட் இஸ்மாயில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!