கோலாலம்பூர், ஆக 8 – அமெரிக்காவின் மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla ) மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசியாவில் தொழிற்சாலைகளை கட்டும் திட்டத்தை கைவிட்டதாக தாய்லாந்து தினசரியின் தகவலை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சான Miti நிராகரித்துள்ளது. பெயர் தெரிவிக்கப்படாக அரசாங்க தகவலை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்ட அந்த செய்தி டெஸ்லாவின் அதிகாரப்பூர்வ அறிக்கை அல்ல என்பதோடு அந்த தகவலை அந்த நிறுவனம் உறுதிப்படுத்தவில்லையென Miti தகவல்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பான செய்தியை தெஸ்லா மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என Miti தெரிவித்துள்ளது.
தெஸ்லா தற்போது அதன் மின்சார கார்களுக்கான பெட்டரி சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பது குறித்து மட்டுமே பேச்சு நடத்தி வருவதாகவும் , சீனா, அமெரிக்கா மற்றும் ஜெர்மனியைத் தவிர மலேசியா, இந்தோனேசியா மற்றும் உலகளாவிய நிலையில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை தொடரப்போவதில்லையென தாய்லாந்து அரசாங்க தகவல்கள் The Nation பத்திரிகையில் தெரிவித்துள்ளன. Elon Musk -கின் உயர் தொழிற்நுட் Space x உட்பட தெஸ்லா பெரிய அளவில் மலேசியாவில் முதலீடு செய்யவிருப்பதாகவும் இதன்வழி ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு உருவாகும் என கடந்த ஜூலை மாதம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருந்தார்.