Latestமலேசியா

தேவைப்பட்டால் Padu முதன்மை தரவுத் தளம் மீண்டும் திறக்கப்படலாம் – ரபிசி ரம்லி

கோலாலம்பூர் , ஏப் 1 – நிர்ணயிக்கப்பட்ட இலக்குகிற்கு ஏற்ப பெரிய அளவிலான உதவித் திட்டம் குறித்து அரசாங்கம் முடிவு செய்த பின் , தேவைப்பட்டால், குறுகிய காலத்திற்கு PADU முதன்மை தரவுத்தள பதிவு மீண்டும் திறக்கப்படும் சாத்தியம் இருப்பதை பொருளாதார அமைச்சர் Rafizi Ramli நிராகரிக்கவில்லை. PADU பதிவு செயல்முறை நேற்று முடிவடைந்த பின்னர், இந்த மாதமும் மானியம் மறுமதிப்பீடு திட்டத்தை தனது அமைச்சு அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் என்று அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பான எந்தவொரு முடிவும் எதிர்காலத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் என்று Rafizi Ramli வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களுக்கு திறக்கப்பட்டிருந்த PADU தரவுத்தள பதிவு நடவடிக்கையின்போது மொத்தம் 17.65 மில்லியன் மக்கள் அல்லது இந்நாட்டின் பிரஜைகளில் 58.7% பேர் பதிவு செய்துள்ளதாக Rafizi சுட்டிக்காட்டினார். 18 வயதுக்கு மேற்பட்ட 11.55 மில்லியன் அதாவது 52.6 விழுக்காட்டினர் PADU தரவு தளத்தில் தங்களது தனிப்பட்ட சுயவிவரங்களை வெற்றிகரமாகப் பதிவுசெய்து புதுப்பித்துள்ளனர், 18 வயதுக்குட்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உட்பட மொத்த நபர்களின் சுயவிவரங்களில் 17.65 மில்லியன் பேர் அல்லது 58.7 விழுக்காட்டினர் வெற்றிகரமாக PADU வில் புதுப்பித்துள்ளனர் என்றும் Rafizi கூறினார்.

பெர்லிஸ் மாநிலத்தில் அதிகபட்சமாக 66.9 விழுக்காட்டினரும் , அதனைத் தொடர்ந்து கிளந்தானில் 65.2 விழுக்காட்டினரும் , Terengganu வில் 62.7 விழுக்காட்டினரும் பேராவில் 60.3 விழுக்காட்டினரும் Padu வில் பதிவு செய்துள்ளனர். அதே வேளையில் சிலாங்கூரில் குறைந்த நிலையில் அதாவது 44.5 விழுக்காடு மக்கள் மட்டுமே PADU தரவு தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!