Latestமலேசியா

நஜிப்பை ஆதரிக்க ஜாஹிட் அதிகாரப்பூர்வ பதவியை பயன்படுத்தவில்லை – அன்வார்

கோலாலம்பூர், ஏப்ரல் 19 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கை  ஆதரித்து Datuk Seri Ahmad Zahid Hamidi  வெளியிட்ட எழுத்துப்பூர்வமான சத்திய பிரமான  பிரகடனம்    அம்னோவின் தலைவர் என்ற முறையில்   வெளியிட்டாரே தவிர  அதிகாரப்பூர்வ  பதவியை  பயன்படுத்தவில்லையென  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்   இன்று தெரிவித்திருக்கிறார்.  நஜிப் தனது மன்னிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள  சீராய்வு மனுவில்  Zahid  எழுத்துப் பூர்வமான சத்திய பிரமான பிரகடனத்தை சமர்ப்பித்தது  அவரது பிரத்தியோக உரிமையென  அன்வார்  விவரித்தார். 

அவர் அம்னோ தலைவர் என்ற முறையில் சத்திய பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்  மற்றும்  சட்டத்துறை தலைவர் மன்னிப்பு வாரியத்தை   பிரநிதிக்கிறார்  என  அன்வார்  தெரிவித்தார். மலாய் ஆட்சியாளர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து முடிவுகளையும்  நாம் கேள்வி எழுப்ப முடியாது என்பதில்   நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவே அரசாங்கத்தின் கொள்கையாக இருப்பதால் இது குறித்து  மேற்கொண்டு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என அவர்   கூறினார். 

முன்னாள்  பேரரசரின் கூடுதல் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து அதனை கூட்டரசு  அரசாங்கமும் மன்னிப்பு வாரியமும்  ஏற்பதற்கான  நஜீப்பின்   சீராய்வு மனு மீதான முயற்சியை  ஆதரிக்கும்   முக்கிய சாட்சியாக   Zahid ட்டின் அந்த  எழுத்துப்பூர்வமான சத்தியபிரமான பிரகடனம்   அமைந்துள்ளது.  ஏப்ரல் 1ம் தேதி  தாம் தாக்கல் செய்திருந்த  சீராய்வு மனுவில் முன்னாள் பேரரசர், ஜனவரி 29ம் தேதி நடைபெற்ற மன்னிப்பு  வாரியக் கூட்டத்தின் போது, ​​ தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் அனுபவிக்கும்படி உத்தரவு பிறப்பித்ததாக நஜீப்  கூறியிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!