Latestசினிமா

நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயரா? நடிகர் சங்கம் ஏற்பாட்டிலான இரங்கல் கூட்டத்தில் விவாதிக்கப்படும் – நடிகர் கார்த்தி

சென்னை , ஜன 4 – மறைந்த தே.மு.திக தலைவர் நடிகர் விஜயகாந்திற்கு நடிகர் சங்கத்தின் சார்பில் இம்மாதம் 19ஆம் தேதி இரங்கல் கூட்டம் நடைபெறும்போது அவரது பெயரை புதிதாக கட்டப்பட்டுவரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு வைக்கப்படுவது குறித்து விவாதிக்கப்படும் என அச்சங்கத்தின் பொருளாளருமான நடிகர் கார்த்தி சிவக்குமார் கூறினார். புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டிடத்திற்கு கேப்டன் விஜயகாந்த் பெயர் வைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.  இது குறித்து  ஜனவரி 19ஆம் தேதி விவாதிக்கப்படும். அதன் பிறகு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என  கார்த்தி  கூறினார்.  

டிசம்பர் 28 ஆம் தேதி  விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் அரச மரியாதையுடன் நல்லடக்கம் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவிடத்தில்  நடிகர்கள்  கார்த்தி மற்றும் சிவக்குமார் இன்று அஞ்சலி செலுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!