Latestமலேசியா

நாடாளுமன்றத்தில் பெர்சே திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் போலீசிற்கு தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை

கோலாலம்பூர், பிப் 26 – நாடாளுமன்றத்தில் பெர்சே திட்டமிட்டுள்ள பேரணி தொடர்பில் போலீசிற்கு அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ Allaudeen Abdul Majid தெரிவித்திருக்கிறார். 2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் 9ஆவது விதி உட்பிரிவு (1) இன் கீழ் பேரணிக்கான நோட்டிஸ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியுள்ளார். முன்கூட்டியே நோட்டிஸ் எதுவும் தெரிவிக்கப்படாமல் நடத்தப்படும் பேரணி குற்றமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டவிதிகளுக்கு எதிராக நடத்தப்படும பேரணியில் கலந்துகொள்ளவேண்டாம் என அனைத்து தரப்பினருக்கும் போலீஸ் ஆலோசனை தெரிவித்திருக்கிறது. மீறி கலந்துகொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என Allaudeen எச்சரித்தார். தங்களது Reformasi 100 peratus பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பிப்ரவரி 27ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இதற்கு முன் Bersih தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!