Latestமலேசியாவிளையாட்டு

நாட்டின் முன்னணி ஸ்குவாஸ் வீராங்கனை சிவசங்கரி ஹாங்காங் போட்டியில் வெற்றி

கோலாலம்பூர், நவ 26 -நாட்டின் முன்னணி ஸ்குவாஸ் வீராங்கனையான
எஸ். சிவசங்கரி , ஹாங்காங் ஸ்குவாஸ் போட்டியில் வெற்றியாளர் பட்டத்தை வென்றார்.

உலகின் 22 ஆவது நிலை ஆட்டக்காரரான சிவசங்கரி தமது முழுத்திறனையும் வெளிப்படுத்தி ஹாங்காங் ஃபுட் க்ளப் பொது போட்டியின் இறுதியாட்டத்தில் 11-9, 11-8, 11-5 என்ற புள்ளிக் கணக்கில் 39 நிமிட போராட்டத்திற்குப் பின் உலகின் 18ஆம் நிலை ஆட்டக்காரரான எகிப்தின் அமீனா அர்ஃபீயை வீழ்த்தினார்.

தொழில் ரீதியிலான ஸ்குவாஸ் சங்கத்தின் இராண்டாவது விருதை இவ்வாண்டு சிவசங்கரி வென்றுள்ளார். கடந்த ஆகஸ்டு மாதம் அவர் துங்கு மூரீஸ் கிண்ண ஸ்குவாஸ் போட்டியில் வெற்றி பெற்றார்.

அதோடு இவ்வாண்டு செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சிவசங்கரி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று மலேசியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!