Latestஉலகம்

‘நான் தான் உங்கள் மகன்’; தொடரும் போலி அழைப்புகளால் மனம் உடைந்து போயிருக்கும் சீன கோடீஸ்வரர்

பெய்ஜிங், ஜனவரி 22 – சீனா, தென் பெய்ஜிங்கிலுள்ள, 51 வயதான கோடீஸ்வரர் ஒருவர், விரக்தியின் விழிம்புக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

என்ன காரணம் என்கிறீர்களா?

காணாமல் போன அவரது மகன் என கூறிக் கொண்டு வரும் அந்நியர்களின் செயலே அதற்கு காரணம் ஆகும்.

‘Xie Yue’ எனும் அந்த கோடீஸ்வரர், வெகு காலத்திற்கு முன்னரே காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருபவருக்கு, பத்து கோடி யுவான் அல்லது 66 லட்சத்து 30 ஆயிரம் ரிங்கிட் சன்மானமாக வழங்கப்படுமென அண்மையில் அறிவித்ததை தொடர்ந்து, அவருக்கு “தலைவலி” தொடங்கியது.

அதனால், ஏறக்குறைய அன்றாடம் அவரை பலர் தொடர்புக் கொண்டு மரபணு சோதனை செய்துக் கொள்ள அழைகின்றனர்.

அந்த கோடீஸ்வரரை காட்டிலும் பத்து வயது குறைவான ஆடவர் ஒருவரும் அதில் அடங்குவார். அதோடு, 41 வயதான அந்நபர், கோடீஸ்வரரின் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று, அவரை வம்படியாக அப்பா என அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதிகப்படியான சன்மானத் தொகைக்கு ஆசைப்படும் நேர்மையற்ற பலர், அந்த கோடிஸ்வரரை அன்றாடம் தொல்லை செய்து வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு, அதுபோல எட்டு முதல் ஒன்பது அழைப்புகளை பெற்று வருவதால், மனமுடைந்த போயிருக்கும் அந்த கோடீஸ்வரர், இனி தம்மை சந்திக்க வர வேண்டாம் எனவும், யாருடனும் இனி தாம் மரபணு சோதனையை செய்துக் கொள்ள போவதில்லை எனவும், Douyin சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள காணொளி ஒன்றின் வாயிலாக அறிவித்துள்ளார்.

எனினும், தற்சமயம் 25 வயதாகும் தனது மகனை, போலீசாரின் உதவியுடன் கண்டுபிடித்து விட முடியும் என்ற நம்பிகையை மட்டும் அவர் கைவிடவில்லை.

முன்னதாக, மூன்று வயதில் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருபவருக்கு, கோடீஸ்வரர் ஒருவர் பெரிய தொகையை சன்மானமாக அறிவித்துள்ளதாக, உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!