Latestமலேசியா

நிலையான நாடாளுமன்ற தவணைக் கால சட்ட மசோதா; DAP ஆதரிக்கிறது

செபராங் ஜெயா, ஜனவரி 16 – நிலையான நாடாளுமன்ற தவணைக் கால சட்டத்தை வரையும் பரிந்துரைக்கு, DAP ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாட்டில் ஏற்படும் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண அல்லது குறைக்க அது வழிகோலுமென, DAP கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும், அந்த சட்ட மசோதாவுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன், அதனை துல்லியமாக ஆராய வேண்டியது அவசியமென லோக் குறிப்பிட்டார்.

நிலையான நாடாளுமன்ற சட்ட மசோதா கொள்ளை அளவில், அரசியல் விவகாரங்கள் அல்லது பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண உதவியாக இருக்கும் என்றாலும், அமலாக்கத்தை பொருத்த வரையில், அது மிகவும் கவனமாக பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

நிலையான நாடாளுமன்ற தவணைக்கால சட்டம் இதற்கு முன் பிரிட்டனில் அமலில் இருந்தது. அதனால், ஐந்தாண்டுகள் தவணைக்காலம் முடிவதற்கு முன் பிரதமரால் தனிச்சையாக அரசாங்கத்தை கலைக்க முடியாது. மாறாக, மேலவையின் கவனத்திற்கு அதனை கொண்டு செல்ல வேண்டும்.

எனினும், நம் நாட்டில் அது இன்னும் ஆய்வு நிலையில் தான் உள்ளதால், விரைவில் பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சர் அதனை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் லோக் சொன்னார்.

முன்னதாக, நிலையான நாடாளுமன்ற தவணைக்கால சட்ட மசோதா தொடர்பான பரிந்துரையை துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாயிட் ஹமிடி முன் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!