Latestமலேசியா

நீர் விநியோகம் வெள்ளிக்கிழமை முழுமையாகச் சீரடையும் ; சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் தகவல்

ஷா ஆலாம், ஜூலை-24, சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடை வரும் வெள்ளிக்கிழமையன்று முழுமையாகச் சீரடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

துர்நாற்ற தூய்மைக் கேட்டால் தற்காலிகமாக மூடப்பட்ட 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகளும் செவ்வாய்க்கிழமை பிற்பகலிலேயே மீண்டும் செயல்படத் தொடங்கியிருப்பதே அதற்குக் காரணமென, அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத்திற்குப் பொறுப்பான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இசா’ம் ஹாஷிம் (Izham Hashim) கூறினார்.

நீரில் துர்நாற்ற தூய்மைக் கேட்டின் அளவு, தொடர்ச்சியாக 3 முறையும் 0 Ton -னாக பதிவாகியதால் அவை மீண்டும் செயல்படத் தொடங்கியதாக அவர் சொன்னார்.

இதையடுத்து ரந்தாவ் பாஞ்சாங் நீர் சுத்திகரிப்பு ஆலையை உட்படுத்தியப் பகுதிகளுக்கு நேற்று மாலை 6 மணி தொடங்கியும், மற்ற 3 சுத்திகரிப்பு ஆலைகளை உட்படுத்தியப் பகுதிகளுக்கு இன்று காலை 8 மணி தொடங்கியும் நீர் விநியோகம் கட்டங்கட்டமாக வழக்கத்திற்குத் திரும்பி வருகிறது.

குறைந்த நீர் அழுத்தம் கொண்ட பகுதிகளுக்கான நீர் விநியோகம் சீரடைய சற்று தாமதமாகலாம்.

எனினும் பெரும்பாலான வீடுகளுக்கு 24 மணி நேரங்களுக்குள் நீர் விநியோகம் கிடைத்து, வெள்ளிக்கிழமை வாக்கில் நிலைமை முழுமையாகச் சீரடையுமென Isham சொன்னார்.

குவாங்கில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் உள்ள டாங்கியில் ஏற்பட்ட கசிவால் சுங்கை குண்டாங், சுங்கை செம்பா ஆறுகளில் துர்நாற்றத் தூய்மைக் கேடு ஏற்பட்டது.

இதனால் 4 நீர் சுத்திகரிப்பு ஆலைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

இதையடுத்து பெட்டாலிங், கிள்ளான், ஷா ஆலாம், கோம்பாக், உலு சிலாங்கூர், கோலாலம்பூர், குவாலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடையால் பாதிக்கப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!