Latestஉலகம்

நேப்பாளத்தில் நிலநடுக்கம்; 128 பேர் பலி

நேபாளம், நவ 4 – நேற்று நேப்பாளத்தின் ஜாஜர்கோட் மாவட்டத்தில் மையம் கொண்டு 6.4 மெக்னிதியுட் அளவில் உலுக்கிய நிலநடுக்கத்தில் 128 பேர் பலியாகினர்.

வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 11.47-க்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நேப்பாள தலைநகர் கத்மாண்டு மட்டுமின்றி அண்டை நாடான இந்தியாவின் டெல்லியிலும் உணரப்பட்டது.

தற்போது அங்கு மீட்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இமயமலை அருகில் அமைந்துள்ள நேபாளத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையில் கடந்த 2015 -ல் 7.8 மெக்னிதியுட் அளவில் உலுக்கிய கடுமையான நிலநடுக்கத்தில் 9000 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!