Latestஉலகம்மலேசியா

நேப்பாள வெள்ளப் பேரிடர்: டிஎன்ஏ முடிவுகள் & இறப்புச் சான்றிதழை விரைந்து வழங்கக் கோரிக்கை

நேப்பாளம், நவம்பர் 22 – நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரில் காணாமல் போன மூத்த தீயணைப்பு அதிகாரி முஹமட் ஃபக்ருல் முனீர் முஹமட் ஈசா (Mohd Fakhrul Munir Mohd Isa), தொடர்பான டிஎன்ஏ பரிசோதனை முடிவுகளையும் இறப்புச் சான்றிதழையும் விரைந்து வழங்க வேண்டுமென அவரது குடும்பத்தினருக்கு ஆதரவாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவரது நெருங்கிய மலையேற்ற நண்பர் ஜைனுடின் லோட் (Zainudin Lot), கூறுகையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் குடும்பத்தினர் வங்கிக் கணக்குகள், சொத்துகள் மற்றும் காப்பீட்டுத் தொகையைப் பெற முடியாமல் தவிப்பதாகத் தெரிவித்தார்.

நேப்பாள சட்டத்தின்படி, ஒருவர் காணாமல் போன 45 நாள்களுக்குப் பிறகு இறப்புச் சான்றிதழ் பெற முடியும் என்றபோதிலும், சம்பவம் நிகழ்ந்து 88 நாள்கள் கடந்தும் இதுவரை எந்தவொரு சாதகமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், பாதிக்கப்பட்டவரின் மனைவி, கணவரின் நிலை மற்றும் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்காததால் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2009ஆம் ஆண்டு முதல் முஹமட் ஃபக்ருலுடன் நட்பில் இருந்த ஜைனுடின், இருவரும் நியூசிலாந்து, சீனா, இந்தியா, நேபாளம் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் பல்வேறு மலையேற்றப் பயணங்களில் பங்கேற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், முஹமட் ஃபக்ருல் உயிருடன் மீட்கப்படுவார் என்ற நம்பிக்கை தமக்கு இன்னும் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அவரது தற்போதைய நிலை குறித்த தெளிவான தகவல்களை விரைந்து வெளியிடுவதன் மூலம் குடும்பத்தினர் காப்பீட்டுத் தொகை உள்ளிட்ட உரிமைகளைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!