Latestமலேசியா

“மலேசியா வந்ததும் முதலில் கற்ற மலாய் வார்த்தை எது?” – வைரலாகும் ஈப்போ இந்தியத் தொழிலாளர்களின் காணொளி

ஈப்போ, நவ 23 – பேராக், ஈப்போவில் உள்ள ஓர் உணவகத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த நான்கு இளைஞர்கள், மலேசியாவில் வேலைக்குச் சேர்ந்த புதிதில் தங்களுக்கு முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்ட மலாய் வார்த்தைகளை டிக்டாக் காணொளி ஒன்றில் கலகலப்பாகப் பகிர்ந்துள்ளனர்.

ஏராளமான பார்வைகளைப் பெற்றுள்ள அந்தக் காணொளி, பலரையும் தங்கள் அனுபவங்களைப் பகிர வைத்துள்ளது.

‘Mi goreng’, ‘pedas’, ‘cepat-cepat’ எனச் சிலர் தங்கள் வேலையில் கற்ற சொற்களைப் பட்டியலிட, இன்னும் சிலர் ‘apa khabar?’, ‘selamat datang’ ikat tepi, nasi lemak, roti canai, Ok makan, என இப்படி தங்களுக்கு அவரவர் துறைகளில் முதலில் சொல்லிக் கொடுக்கப்பட்ட வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ளனர்.

ஒருவர் சொன்ன வார்த்தைக்கு இன்னொருவர் தன் அனுபவத்தோடு பதிலளிக்க, ஈப்போ இளைஞர்கள் தொடங்கிய கலகலப்பு இப்போது கருத்துப் பகுதியிலும் தொடர்ந்து வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!