Latestஉலகம்

நோர்வே மன்னர் ஹரால்ட் மலேசிய மருத்துவமனையில் அனுமதி

ஒஸ்லோ, பிப் 28 – Norway மன்னர் Harald தொற்றுக்கு உள்ளானதைத் தொடர்ந்து மலேசியாவிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என நோர்வே அரச அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 87 வயதுடைய மன்னர் தென் கிழக்காசிய நாட்டிற்கு தனிப்பட்ட வருகை மேற்கொண்டிருந்தார்.

மலேசியாவில் விடுமுறையில் தங்கியிருந்தபோது மன்னர் Harald உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசிய மற்றும் Norway மருத்துவர்கள் அவரை நல்ல முறையில் கவனித்து வருகின்றனர். 1991 ஆம் ஆண்டிலிருந்து Norway யின் சடங்குப்பூர்வமான அரசாங்கத் தலைவராக மன்னர் Harald இருந்து வருகிறார்.

ஐரோப்பாவில் இன்னும் வாழ்ந்துவரும் பழைய மன்னர்களில் ஒருவராக அவர் விளங்கிவருகிறார். அண்மைய ஆண்டுகளில் அவர் கிருமியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததோடு இருதய அறுவை சிகிச்சையும் மேற்கொண்டிருந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!