Latestஇந்தியா

‘பட்டர் சிக்கன்’ யாருக்கு சொந்தம்? ; காப்புரிமை கோரி வழக்குத் தொடுத்திருக்கும் இரு இந்திய உணவகங்கள்

புதுடெல்லி, ஜனவரி 29 – வட இந்தியாவின் மிகவும் பிரபலமான அல்லது அதிகம் விரும்பி உண்ணப்படும் உணவு வகைகளில் “பட்டர் சிக்கன்” உணவும் ஒன்றாகும்.

“பட்டர்” எனப்படும் வெண்ணெய் சேர்ந்து சமைக்கப்படும் கோழியை, ரொட்டி, பரோட்டா அல்லது சோற்றுடன் வைத்து உண்டால் சுமையாக இருக்கும்.

எனினும், அந்த “பட்டர் சிக்கன்” உணவை யார் முதலில் கண்டுபிடித்தார் எனும் சர்ச்சை தற்போது தலைதூக்கியுள்ளது.

அதில், பட்டர் சிக்கன் உணவின் காப்புரிமையை கோரி, “Moti Mahal” எனும் உணவகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

1930-ஆம் ஆண்டு வாக்கில், அந்த உணவகத்தின் தோற்றுனர்தான், பட்டர் சிக்கனை கண்டுபிடித்தாக அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனால், பட்டர் சிக்கன் தங்களுடையது என உரிமை கொண்டாடி வரும் “Daryaganj” என்ற உணவகத்திடமிருந்து, இரண்டு லட்சத்து 40 ஆயிரம் டாலரை அது இழப்பீடாக கோரியுள்ளது.

இந்நிலையில், “Moti Mahal” தோற்றுனருடன் இணைந்து பணியாற்றிய தங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவர் தான் பட்டர் சிக்கனை கண்டுபிடித்ததாகவும், அதற்கு 2018-ஆம் ஆண்டே தாங்கள் காப்புரிமை பெற்று விட்டதாகவும் “Daryaganj” உணகவம் கூறியுள்ளது.

இந்த வழக்குக்கான முடிவை, இவ்வாண்டு மே மாதம் நீதிமன்றம் அறிவிக்குமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!