Latestமலேசியா

பிரபல சுற்றுலா மையம் என்ற பொழிவை இழக்கிறது, லங்காவி

புத்ரா ஜெயா, பிப் 17 – நாட்டின் பிரபல சுற்றுலா மையம் என்ற பொழிவை லங்காவி இழக்கிறது என சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார். நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக லங்காவியை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தபோதிலும் அங்கு வரும் சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக தியோங் தெரிவித்தார். மக்களின் கவனத்தை லங்காவி இழந்துவருவது குறித்தும் அவர் கவலை தெரிவித்தார். மேலும் லங்காவியை மேம்படுத்தும் பொறுப்பு கெடா மாநில அரசாங்கத்தை பொறுத்ததாகும் என அவர் கூறினார்.

கவரக்கூடிய இடங்களை லங்காவி கொண்டிருந்தாலும் இன்றைய நவீன கால சுற்றுப்பயணிகள் இணையத்தளங்களின் கண்ணொட்டங்களையும் அதன் மூலம் பெறும் தகவல்களையும் அதிகமாக நம்பியிருக்கின்றனர். சமூக வலைத்தளங்களின் மூலம் பெறப்படும் காணொளிகள் அவர்களை எளிதில் கவரக்கூடியதாக இருப்பதையும் தியோங் சுட்டிக்காட்டினார். மேலும் மதுபானங்கள் அருந்தும் பிரச்சனைகள் குறித்த பயனீடு விவகாரங்களும் உண்மை இல்லையென்றாலும், சமூக வலைத்தளங்களில் படிக்கக்கூடிய தகவல்களைத்தான் மக்கள் நம்புகின்றனர் என தியோங் மேலும் தெரிவித்தார்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!