
கிள்ளான், ஆகஸ்ட் 24 – கிள்ளான், பண்டமாரானிலுள்ள உணவகத்தில் ஆகஸ்ட் 22 இரவு நடந்த ஆயுதங்களுடன் கூடிய மோதல் சம்பவம் தொடர்பாக 18 முதல் 25 வயதிற்குட்பட்ட 5 ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இரவு 11.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் 22 மற்றும் 26 வயதுடைய இரு ஆண்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் முகம் மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சம்பவத்திற்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 26 வரை 3 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவியல் சட்டத்தின் கீழ் அதிகபட்சம் 5 ஆண்டுகள் சிறை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.



