Latestமலேசியா

பத்துமலை ஐயப்பன் கோவிலில் மகரஜோதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் ஜன 16-பத்துமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் மகரஜோதி திருவிழா தரிசனம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சபரிமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வு மகரஜோதி தரிசனமாகும். பத்துமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அதன் தலைவர் யுவராஜா குப்புசாமி தலைமையில் நடைபெற்ற மகரஜோதி திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஐயப்பன் பக்தர்கள், பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சிக்கு டிஜிட்டல் எனப்படும் இலக்கியியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ சிறப்பு வருகை புரிந்தார். மகர சங்கராந்தி நட்சத்திரத்தில் தைப்பொங்கல் திருநாளில் இந்த மகரஜோதி திருவிழா வருடா வருடம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் கோபிந்த் சிங்கிற்கு சுவாமி ஐயப்பன் கோவில் தலைவர் யுவராஜா மாலை அணிவித்து சிறப்பித்தார். பின்னர் பக்தர்கள் முன்னிலையில் உரையாற்றிய அமைச்சர் கோபிந்த் சிங் பொங்கல் என்பது “தை” மாதத்தின் முதல் தேதியில் வரும் அறுவடைப் பண்டிகையாகும். பக்தர்கள் 42 நாட்கள் விரதத்தை நிறைவு செய்யும் ஐயப்பனுக்கான சடங்கையும் இந்த விழா குறிப்பதாக தெரிவித்தார். மேலும் பத்துமலை சுவாமி ஐயப்பன் ஆலயத்திற்கு 20,000 ரிங்கிட் வழங்குவதாகவும் அவர் அறிவித்தார். பாலா இல்ல சமுக நல இல்லத்தில் தங்கியிருக்கும் 40 இந்திய மாணவர்கள் பள்ளி சீருடைகள், காலணிகள் மற்றும் புத்தக பைகள் வாங்குவதற்காக பத்துமலை சுவாமி ஐயப்பன் கோவிலின் சார்பாக 8,016 ரிங்கிட் ரிங்கிட் காசோலையை வழங்கி பேருதவி புரிந்தது. பாலா இல்ல சமுக நல பொறுப்பாளர்களிடம் 8,016 ரிங்கிட் காசோலையை அமைச்சர் கோபிந்த் சிங், சுவாமி ஐயப்பன் ஆலய தலைவர் யுவராஜா ஆகியோர் நேரடியாக ஒப்படைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!