Latestமலேசியா

பத்து பஹாட்டில் RM500,000க்கும் அதிகமான தங்க நகைகள் மோசடி: விற்பனையாளர் மீது 35 குற்றச்சாட்டுகள்

பத்து பஹாட், மே-28-தங்க நகை நிறுவனத்தில் பணியாற்றிய 33 வயது விற்பனையாளர் மீது 500,000 ரிங்கிட்டுக்கும் அதிகமான நகைகள் தொடர்பாக 35 நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

நிறுவனம் விற்பனைக்காக ஒப்படைத்த சங்கிலி, வளையல் மற்றும் மோதிரங்களை அவர் விற்பனை செய்யாமல், அடகு கடைகளில் அடகு வைத்து பணம் பெற்றதாக கூறப்படுகிறது. அந்த பணம் சூதாட்டத்திற்காக பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை பத்து பஹாட் மற்றும் குளுவாங் பகுதிகளில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட போது சந்தேக நபர் அக்குற்றங்களை மறுத்துள்ளார். இந்த வழக்கு ஜூன் 25 ஆம் அன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!