Latestமலேசியா

பத்து பஹாட் தொழிற்சாலையில் இருந்து, ‘அல்லா’ என அஞ்சிடப்பட்ட 5 காலுறைகள் பறிமுதல்

பத்து பஹாட், மார்ச் 19 – ஜோகூர், ஸ்ரீ காடிங் தொழிற்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை ஒன்றிலிருந்து, “அல்லா” எனும் வார்த்தை அச்சிடப்பட்டிருந்த ஐந்து ஜோடி காலணிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சிலாங்கூர், பண்டார் சன்வேயிலுள்ள, கேகே சூப்பர் மாட் திரும்ப ஒப்படைத்த காலுறைகள் அவை என்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 16 காலுறை மூட்டைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதையும், பத்து பஹாட் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் இஸ்மாயில் டோல்லா உறுதிப்படுத்தினார்.

எனினும் அந்த மூட்டைகளில், அல்லா வார்த்தை பதிக்கப்பட்ட காலுறைகள் எதுவும் இல்லை.

அந்த காலுறைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதும், பொட்டலமிட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகளை மட்டுமே சம்பந்தப்பட்ட தொழிற்சாலை மேற்கொண்டு வருவதும் தெரிய வந்துள்ளது.

குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் டோல்லா சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!