Latestமலேசியா

பந்திங்கில் அணைக்கட்டு உடைந்தது; வெள்ளத்தினால் 32 வீடுகள் பாதிப்பு

கோலா லங்காட், ஜூன்-25-பந்திங்கில் அணைக்கட்டு உடைந்ததால்
தாமான் லங்காட் உத்தாமா 2, புக்கிட் சங்காங் இளைஞர் நிலத் திட்டம் ஆகிய இடங்களில் இன்று விடியற்காலையில் ஏற்பட்ட வெள்ளத்தில் 32 வீடுகள் பாதிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பந்திங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த ஆறு தீயணைப்பு வீரர்களைக் கொண்ட குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். 0.3 மீட்டர் முதல் 0.9 மீட்டர்வரை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது.

குடியிருப்பு பகுதியிலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவிலுள்ள அனைக்கட்டு உடைந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பிரிவுக்கான உதவி இயக்குநர் அஸ்ருல் ரிசால் அஸ்பர் ( Ashrul Riezal Asbar ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள மக்கள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும்படி ஆலோசனை தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!