Latestமலேசியா

மலாக்காவில் ரக்பி பயிற்சியில் பங்கேற்ற மாணவர் மயங்கி விழுந்து மரணம்

கோலாலம்பூர், ஜூன் 25 – மலாக்கா , தெலுக் மாஸில் ( Telok Mas ) உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற ரக்பி விளையாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவன் ஒருவன் மயங்கி விழுந்த பின்னர் மரணம் அடைந்தான்.

14 வயதுடைய இரண்டாம் படிவ மாணவன் சுமார் 15 நிமிடங்கள் பயிற்சியை முடித்திருந்த நிலையில், இடைவேளைக்குப் பிறகு பயிற்சியாளரின் விளக்கத்தைக் கேட்டுக்கொண்டிருந்தபோது அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படதால் திடீரென மயங்கி விழுந்து இறந்ததான்.

நேற்று மாலை மணி ஆறு அளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தினால் தங்களது குடும்ப உறுப்பினர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியிருப்பதாக உயிரிழந்த மாணவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவன் , தனது உடல்நலம் மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இதற்கு முன் குடும்ப உறுப்பிர்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொண்டதில்லை என்றும் அவர் வேதனையோடு குறிப்பிட்டார்.

இதனிடையே அந்த மாணவன் இறந்த விவகாரம் தொடர்பில் போலீஸ் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடும் என மலாக்கா தெங்கா இடைக்கால போலீஸ் தலைவர் Superintendan ஹலிம் அப்பாஸ் ( Halim Abas) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!