Latestஉலகம்

பல நகர்களுக்கான விமான சேவைகளை நிறுத்தியது ஈரான்; Isfahan நகரிலிருந்து விமானங்கள் வெளியேற்றம்

தெஹ்ரான் , ஏப் 19 – ஈரானில் உள்ள  ஒரு தளத்தில் இஸ்ரேல் ஏவுகனைகள்  தாக்கியுள்ளதாக   அமெரிக்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி ABC  செய்தி நிறுவனம்  தகவல் வெளியிட்டது.   இஸ்ரேல் மீது பதிலடி கொடுப்பதற்காக  ஆளில்லா விமானத் தாக்குதலைத் ஈரான் தொடங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அந்நாட்டின் முக்கிய நகர  மையத்தில் இஸ்ரேல் தாக்குதல்  நடத்தியுள்ளதாக  ஈரானிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த தகவலை உடனடியாக உறுதிப்படுத்த முடியவில்லையென Reuters நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 ஈரானின் மத்திய நகரமான  Isfahan னில்  உள்ள விமான நிலையத்தில் வெடிச்சத்தம் கேட்டதாகவும், ஆனால் அதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் ஈரானின்  Fars செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  Isfahan , Shiraz மற்றும்  Tehran  ஆகிய  நகர்களுக்கான   விமானங்களை ஈரான் நிறுத்தியிருப்பதாக அந்நாட்டின்  அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தின் மையப் பகுதியான  Natanz  உட்பட பல ஈரானிய அணுசக்தி தளங்கள்  Isfahan  மாநிலத்தில்  அமைந்துள்ளன. இன்று  அதிகாலை ஈரான்  மீது பறந்து கொண்டிருந்த சில Emirates மற்றும் Flydubai  விமானங்கள் வான்வெளியில் இருந்து திடீரென  திருப்பங்களைச் செய்ததாக கண்காணிப்பு இணையதளமான  Flightradar 24 இல் காட்டப்பட்டுள்ள விமானப் பாதைகள் தெரிவிக்கின்றன. Tehraனின் Imam Khomeini அனைத்துலக விமான நிலையம் அனைத்து விமானங்களுக்கும்   மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!