Latestமலேசியா

பள்ளிப் பேருந்தில் மாணவிகளை வீடியோ எடுத்து தேவையில்லாத caption வைத்த ஓட்டுநர் கைது

கோலாலம்பூர், செப்டம்பர் -6, மாணவர்களை உட்படுத்தி சர்ச்சைக்குரிய வீடியோக்களை டிக் டோக்கில் பதிவேற்றி வைரலான
பள்ளிப் பேருந்து ஓட்டுநர் கைதாகியுள்ளார்.

24 வயது அவ்விளைஞர் சிம்பாங் ரெங்கத்தில் இன்று அதிகாலை கைதுச் செய்யப்பட்டதை, ஜோகூர் போலீஸ் தலைவர் கமிஷ்னர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.

வீடியோக்களை டிக் டோக்கில் பதிவேற்ற அவர் பயன்படுத்தி வந்த கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டது.

6 லட்சம் பின்தொடர்பவர்களை (followerrs) வைத்துள்ள அவ்வாடவரின் டிக் டிக் பதிவில், பள்ளி மாணவிகளின் வீடியோவோடு தேவையில்லாத வாசகம் (caption) இடம் பெற்றிருந்தது.

“harini crush kita buat homework” என்ற இடத்திற்கு சற்றும் பொருந்தாத வாசகத்தை அவர் வைத்துள்ளதால், X தளம் வரை நெட்டிசன்கள் கொதித்து வருகின்றனர்.

ஊரார் வீட்டு பிள்ளைகளை வீடியோ எடுத்து இப்படித்தான் அநாகரிகமாக caption போடுவதா என இணையவாசிகள் அவரை கருத்துகளால் வெளுத்து வாங்கினர்.

இது, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்சி ஷுக்ரி (Nancy Shukri) வரை சென்று விட்டது.

அவ்வாடவரின் செயல் ஏற்றுக்கொள்ள கூடியதல்ல என்பதோடு, அதனை நியாயப்படுத்தவும் கூடாது என அமைச்சர் கடிந்து கொண்டார்.

எனவே, அது குறித்து உடனடியாகப் போலீசில் புகார் செய்யுமாறு சிறார் மேம்பாட்டுத் துறையை அமைச்சர் உத்தரவிட்டார்.

சிறார்கள் மீதான பாலியல் வன்கொடுமை புலன் விசாரணைக்குப் பொறுப்பான ஜோகூர் IPK D11 பிரிவுடன் அமைச்சு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகவும் நேன்சி கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!