Latestமலேசியா

பள்ளி நடவடிக்கை எடுக்கவில்லையாம்; நேரடியாக கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் புகாரளித்த முதலாம் படிவ மாணவன்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- பகடிவதை புகார் தொடர்பில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல், aduanbuli.moe.gov.my இணையத்தளம் வாயிலாக கல்வி அமைச்சுக்கே நேரடியாக புகார் செய்துள்ளான் முதலாம் படிவ மாணவர் ஒருவன்.

ஃபேஸ்புக் பதிவில் அடையாளம் தெரியாத ஒருவர் செய்திருந்த screenshot X தளத்தில் வைரலானதில் இது தெரிய வந்துள்ளது.

அதில் தனது மகன் மிகவும் அமைதியானவன் என்றும் அவனுக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவே என்றும் அம்மாணவனின் தாய் கூறினார்.

இந்நிலையில் பள்ளியில் சக வகுப்பு மாணவனால் பகடிவதைக்கு ஆளான மகன் அதனை கட்டொழுங்கு ஆசிரியரிடம் புகார் செய்தான். ஆனால் அவரோ அதை நம்ப மறுத்து அலட்சியம் செய்தாராம்.

அவ்விஷயத்தை தன்னிடம் கூட கூறாத மகன், கல்வி அமைச்சின் இணையத்தளம் சென்று, புகார் பகுதியைத் தேடி அவனாக புகார் செய்து விட்டான் என தாய் தெரிவித்தார்.

பகடிவதை செய்த மாணவனின் புகார் முதற்கொண்டு அனைத்து விவரங்களையும் அவன் புகாரில் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டதாக தாய் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!