Latestமலேசியா

பள்ளி மாணவர்கள் மோதல்; 8 பேருக்கு 60 மணி நேர சமூக சேவை உத்தரவு

தாவாவ், நவம்பர் 20 – கடந்த ஜூலை மாதம், சபா ஜாலான் அப்பாஸ் (Jalan Apas) பகுதியிலுள்ள தனியார் பள்ளிக்கு வெளியே சட்டவிரோதக் கூட்டத்தில் பங்கேற்று மோதல் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட எட்டு படிவம் 2 மாணவர்களுக்கு, ஆறு மாதங்களுக்குள் 60 மணி நேர சமூக சேவை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

14 வயதுடைய அந்த எட்டு மாணவர்களும், இரண்டு மாதங்களுக்கு தாவாவ் மாவட்டத்தைவிட்டு வெளியேறக் கூடாது என்றும் தாவாவ் சிறார் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மாணவர்களின் வயது, கல்வி மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

கடந்த ஜூலை 10ஆம் தேதி காலை 11 மணியளவில் பள்ளிக்கு வெளியே நடைபெற்ற மோதல் தொடர்பாக, ஆகஸ்ட் 12ஆம் தேதி அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆண், பெண்ணின் முகங்களை ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளில் மாற்றி உருவாக்கிப் பரப்பிய விவகாரம் தொடர்பான சர்ச்சையே இந்த மோதலுக்குக் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. இச்சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!