
கோத்தா பாரு, ஏப்-13-பள்ளி வளாகத்தில் நேற்று மதியம் இரண்டு மாணவர்களை தனது காரில் ஆசிரியை ஒருவர் மோதிய சம்பவத்தில் முதல் படிவம் பயிலும் மாணவி ஒருவர் மரணம் அடைந்ததால் , அந்த ஆசிரியை இரண்டு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இன்றும் நாளையும் அந்த ஆசிரியரை தடுத்து வைக்கும் உத்தரவை மாஜிஸ்திரேட் வான் முகமட் இஷாட் வான் அப்துல்லா பிறப்பித்தார்.
சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் பிரிவு 41 (1) இன் கீழ் விசாரணைக்கு உதவியாக 57 வயதுடைய அந்த ஆசிரியை தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
Tanjung Mas தேசிய இடைநிலைப் பள்ளியில் நடந்த அந்த சம்பவத்தில் தலையில் கடுமையான காயத்திற்கு உள்ளான மாணவி விபத்து நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு மாணவி கடுமையாக காயம் அடைந்ததால் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அந்த ஆசிரியை தவறுதலாக எக்சிலேட்டரை அழுத்தியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளியின் தொழுகை மையத்திற்கு முன் தங்களது காலணியை அணிந்து கொண்டிருந்த இரண்டு மாணவிகளை மோதியது .



