ஜோகூர் பாரு, ஆகஸ்ட் -31, ஜோகூர், பாசீர் கூடாங்கில் நேற்று மாலை 8 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் டிரேய்லர் லாரி ஓட்டுநர் கொல்லப்பட்டார்.
பாசீர் கூடாங் நெடுஞ்சாலையின் 26-வது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது. 3 டிரேய்லர் லாரிகள், ஒரு MPV வாகனம், 3 மோட்டார் சைக்கிகள் விபத்தில் சிக்கின.
உச்சநேரம் என்பதால், ஜோகூர் பாருவை நோக்கிச் செல்லும் சாலையில் நெரிசல் நிலவியது. விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருவதாக பாசீர் கூடாங் போலீஸ் கூறியது.