
இந்தியா, மே 28 – இந்தியாவின் கொல்கத்தாவில் அமைக்கப்பட்டிருந்த 21 மீட்டர் உயரமுள்ள உலக புகழ்பெற்ற அர்ஜென்டீனாவின் (Argentina) காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் (Lionel Messi) சிலை, பலத்த காற்றில் ஆடத் தொடங்கியதால் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அரசு பொறியாளர்கள் சிலை பாதுகாப்பற்றது என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் கயிறுகள் மூலம் அதை நிலைநிறுத்த முயன்றனர்.
கடந்த ஆண்டு “GOAT Tour of India” நிகழ்வை நினைவுகூர்ந்து இந்த சிலை நிறுவப்பட்டது. தற்போது அதை விரைவில் அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.



