
கோலாலம்பூர், மே-28-டோல் சாவடிக்கு அருகில் உள்ள குறுகிய மோட்டார் சைக்கிள் பாதையில் ஒரு நீல நிற செடான் கார் சிக்கிக்கொண்டதைக் காட்டும் 19 வினாடிகளைக் கொண்ட காணொளி ஒன்று வைரலாகி, சமூக ஊடகப் பயனர்களிடையே வேடிக்கையையும் விமர்சனத்தையும் பெற்றது.
இந்தக் காணொளியை அசால் ஜுஜூர் (Asal Jujur ) என்ற பேஸ்புக் பயனர் பதிவுசெய்து, ‘Update&Info my’ முகநூல் பக்கத்தில் பதிவேற்றியதால் அது இணையத்தில் விரைவாகப் பிரபலமடைந்தது.
காணொளியில், அந்த நீல நிற செடான் காரின் ஓட்டுநர் தனது தவறை மிகவும் தாமதமாக உணர்ந்ததோடு தடுப்பு போடப்பட்ட பாதையிலிருந்து அந்த வாகனம் தடுமாறி பின்னோக்கி வர முயன்றதும் , எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதையை முழுவதுமாக மறித்ததையும் காணமுடிந்தது.
இந்தச் சம்பவத்தினால் அதிருப்தியும் , கோபமும் அடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீண்டும் மீண்டும் ஹாரன் அடித்து தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியதையும் காணமுடிந்தது.
இந்தச் சம்பவம் எந்த நெடுஞ்சாலையில் அல்லது டோல் சாவடிக்கு அருகே நடந்தது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை.



