Latestமலேசியா

பாராசிட்டமால் மாத்திரை கல்லீரலை பாதிக்கும்; ஆய்வாளர்கள் எச்சரிக்கை

பிரிட்டன், பிப் 23 – Paracetamol மருந்தை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்படும் என ஆய்வாளர்கள் ஆய்வில் கண்டு பிடித்துள்ளனர். 

பொதுவாகவே ஏற்படும் தலைவலியில் தொடங்கி, அனைத்து வலிகளின் நிவரணமாக இருப்பது பாராசிட்டமால் மருந்தே ஆகும்.

இந்நிலையில், எவ்வளவு கடுமையான வலியாக இருந்தாலும், ஒரு நாளைக்கு 8 மாத்திரைகளுக்கு மிகாமல் தான் அம்மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

ஒருவேளை, அதிக அளவு பாராசிட்டமால் மருந்தை உட்கொண்டால் கல்லீரல் பாதிக்கப்படுவது உறுதியாகுமாம்.

இதனை மனிதர்கள் மற்றும் எலிகளின் கல்லீரலையும் பிற உறுப்புகளிலிலும் பாராசிட்டமாலின் தாக்கம் குறித்து Edinburgh பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் நிரூபித்துள்ளனர். 

அதாவது, எலிகள் மீது பரிசோதனைகள் நடப்பட்ட போது, அவற்றின் கல்லீரல் சேதமடைந்துள்ளது. ஆய்வின் முடிவில், அளவுக்கு அதிகமான இந்த மருந்து கல்லீரலுக்கும் மற்ற உறுப்புகளுக்கும் இடையே உள்ள திசுக்களை சேதப்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவுக்கூர்ந்து, பாராசிட்டமால் மாத்திரையை அளவோடு எடுத்துகொள்வது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!