Latestமலேசியா

பாரில் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது அம்பு எய்யும் வீரர் தனேஷ்

கோலாலம்பூர், மார்ச் 7 – ஜக்கிய அரபு சிற்றரசு துபாயில், நேற்று நடைபெற்ற எட்டாவது Para Fazza  அம்பெய்தும் உலக தரவரிசை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம், தேசிய அம்பெய்தும் தடகள வீரர்  G Daneshen, 2024 பாரிஸ் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்ற மூன்றாவது தேசிய அம்பெய்தும் வீரராக பெயர் பதித்துள்ளார்.

26 வயது Danes, பாராலிம்பிக் தகுதி சுற்றின், இறுதிப் போட்டியில், ஆஸ்திரியாவின் அம்பெய்தும் வீரர் Michael Meierpada-ரிடம் 133-143 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்று இரண்டாவது இடத்தை பிடித்தார்.

முன்னதாக, உலக தரவரிசையில் 32-வது இடத்தை வகிக்கும் Danes, கடந்த உலக தகுதிச் சுற்று போட்டியின், அரையிறுதிச் சுற்றில், தாய்லாந்தை சேர்ந்த Sakon Inkaew-வ்வை 140-139 மற்றும் கால் இறுதியில், தைவானின் Wu Chung Hung-கை 138-136 என்ற புள்ளிகளின் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

S.Suresh, Nur Jannaton Abd Jalil ஆகியோரை அடுத்து, 2024 Paris பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற நாட்டின் மூன்றாவது அம்பெய்யும் வீரராக தனேஷ் திகழ்கிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!