Latestஉலகம்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், பாலின பாகுபாடு இல்லாத அணியை களமிறக்கும் ஆப்கானிஸ்தான் ; தலிபான்களுக்கு அனுமதி இல்லை

லாசன்னே, ஜூன் 14 – பிரான்ஸ், பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியில், பாலின பாகுபாடு இன்றி, சமத்துவமான அணியை ஆப்கானிஸ்தான் களமிறக்குகிறது.

அந்த அணியில், மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் என மொத்தம் ஆறு விளையாட்டாளர்கள் ஆப்கானிஸ்தானை பிரதிநிதித்து களம் காணவுள்ளனர்.

அதே சமயம், தலிபான் தரப்பிலிருந்து யாரும் அந்த விளையாட்டு போட்டிகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என, சர்வதேச ஒலிம்பிக் மன்றம் அறிவித்துள்ளது.

பாலின சமத்துவக் குழுவை களமிறக்குவது, தாலிபான் ஆட்சியின் கீழ் பெண்கள் மற்றும் யுவதிகள், விளையாட்டு அல்லது உடற்பயிற்சி துறைகளில் ஈடுபட தடை விதித்திருக்கும் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகிற்கே விடுக்கப்படும் ஒரு செய்தி என, ஒலிம்பிக் மன்றம் கூறியுள்ளது.

அதனால், சர்வதேச ஒலிம்பிக் மன்றத்தால் நியமிக்கப்பட்ட, ஆப்கானிஸ்தான் தேசிய ஒலிம்பிக் மன்றத்தின் தலைவர் மற்றும் அதன் பொதுச் செயலாளருடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அது தெரிவித்தது.

அதன் வாயிலாக, பாலின சமத்துவ அணியை உருவாக்க முடிந்துள்ளதையும் அது சுட்டிக்காட்டியது.

ஆப்கானிஸ்தானில், 2021-ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள், பெண்களின் கல்வி வாய்ப்பை முடக்கியதோடு, பயணக் கட்டுபாடுகள் உட்பட பல்வேறு அடக்குமுறைகளை விதித்துள்ளது.

1999-ஆம் ஆண்டு, தாலிபான்களின் ஒடுக்குமுறையால், ஆப்கானிஸ்தான் தேசிய ஒலிம்பிக் மன்றத்திற்கு, சர்வதேச ஒலிம்பிக் மன்றம் தடை விதித்தது. அதனால், 2000-ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற, ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், 2001-ஆம் ஆண்டு, தாலிபான்களின் வீச்சுக்கு பின்னர், ஆப்கானிஸ்தான் மீண்டும் அனைத்துலக ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்துக் கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!