Latestஉலகம்

பாரிஸ் 2024 ஒலிம்பிக் பதக்கங்கள் அறிமுகம்: ஈபிள் கோபுர உலோகத் துண்டு உள்ளடக்கம்

பாரிஸ், பிப் 11 – விளையாட்டு உலகில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒலிம்பிக் விளையாட்டு இவ்வாண்டு எதிர்வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக்கில் வெற்றியாளருக்கு வழங்கப்படும் பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

பதக்கத்தில் பிரான்ஸ்சின் அடையாளமாகவும், உலகின் அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் ஈபிள் (Eiffel) கோபுர சின்னம் இடம் பெற்றுள்ளது. அதாவது, அந்த பதக்கங்கள் மையத்தின் வடிவமைக்கப்பட்டிருக்கும் அறுகோண வடிவ இரும்புத் துண்டானது அசல் ஈபிள் கோபுரத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தை புதுப்பித்த போது அதில் இருந்து அகற்றப்பட்ட இரும்பு உலோகங்கள் பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவற்றை செதுக்கி, பாலிஷ் செய்து சிறிய துண்டுகளாகப் பதக்கத்தின் பின்பகுதியில் பதிக்கப்பட்டுள்ளன. இவற்றை பிரான்சின் பிரபல ஆபரண நிறுவனமான “Chaumet” வடிவமைத்துள்ளது.

பாரிசில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் ஒவ்வொரு விடயங்களும் பார்த்து பார்த்து செய்யப்பட்டு வருகிற நிலையில், பிரான்ஸ் நாட்டின் பெருமையை பிரதிபலிக்கும் வகையில் ஈபிள் கோபுரத்தின் இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பான அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!