Latestமலேசியா

பாரீஸ் ஒலிம்பிக்கில் முதல் தங்கத்தை வெல்லும் விளையாட்டாளருக்கு குவியும் ரொக்கப் பரிசுகளும், சன்மானங்களும்

புக்கிட் ஜாலில், ஜூலை-16, 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மலேசியாவுக்குத் முதல் தங்கப் பதக்கத்தை வென்றுத் தரும் விளையாட்டாளருக்கு, ரொக்கப் பரிசுகளும் சன்மானங்களும் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அவ்வகையில் ஒலிம்பிக்கில் மலேசியாவுக்கு முதல் தங்கத்தைப் பெற்றுத் தரும் விளையாட்டாளருக்கு, சிலாங்கூர், புன்ச்சாக் ஆலாமில் ( Puncak Alam) 10 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அடுக்குமாடி வீட்டை தனியார் நிறுவனமொன்று பரிசாகக் கொடுக்க முன்வந்துள்ளது.

Road To Gold (RTG) திட்டத்தின் வாயிலாக இளைஞர்-விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ (Hannay Yeoh) இன்று அந்நற்செய்தியை அறிவித்தார்.

இவ்வேளையில், மின்சாரப் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனமொன்று ஆதரவளிக்கும் 3 விளையாட்டாளர்கள் ஒருவேளை நாட்டுக்கான முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றால், அவர்களுக்கு 10 லட்சம் ரிங்கிட் ரொக்கப் பரிசை வழங்கப்படவுள்ளது.

தேசியப் பூப்பந்து அணியைச் சேர்ந்த Aaron Chia, Soh Wooi Yik, Chen Tang Jie ஆகியோரே அம்மூவராவர்.
இவையனைத்தும் வெறும் பரிசுகளும் ரொக்க சன்மானங்களும் மட்டுமல்ல; நாட்டின் விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கான வர்த்தக நிறுவனங்களின் ஆதரவின் அடையாளம் என அமைச்சர் ஹானா இயோ சொன்னார்.

டத்தோ ஸ்டுவர்ட் ராமலிங்கம் ( Datuk Stuart Ramalingam) தலைமையிலான RTG செயலகம், சன்மானங்கள் வழங்க ஆர்வமுள்ள மேலும் பல தனியார் நிறுவனங்களுடன் பேசி வருகிறது.

உலகின் அந்த மாபெரும் விளையாட்டுத் திருவிழாவில் இருந்து முதல் தங்கப் பதக்கத்தோடு நாடு திரும்புவதை ஊக்குவிக்கும் முயற்சியாக சன்மானங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 26-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்குகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!