Latestமலேசியா

“பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கலாமா?” குழந்தைகளிடம் வாக்குக் கேட்ட விவகாரத்தில் விஜய் மீது குழந்தையின் தந்தை போலீஸில் புகார்

கோவை, ஏப்ரல்-26-தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒருவழியாக முடிந்து மே 4 முடிவுக்கு அனைவரும் காத்திருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது கோயம்புத்தூர் போலீஸ் ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

​ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற இறுதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘குழந்தைகள் சாக்லேட்டுக்கு அடம்பிடிப்பது போல, பெற்றோரிடம் அடம்பிடித்து தனக்கு வாக்களிக்க வற்புறுத்த வேண்டும்’ என விஜய் பேசியிருந்தார்.

இந்தக் கருத்து குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் திசைமாற்றுவதாகக் கூறி, கோயம்புத்தூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் புகாரளித்துள்ளார்.

​விஜய்யின் பேச்சைக் கேட்டு தனது 5 வயது மகன், விஜய்-க்கு வாக்களிக்க வேண்டும் என தன்னை வற்புறுத்தியதாகவும் அப்படி இல்லையென்றால் சாப்பிட மாட்டேன் என அடம் பிடிப்பதாகவும் கூறினார்.

திமுக கூட்டணியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தாம் அதனால் தமிழக வெற்றி கழகத்திற்கே வாக்களித்ததாக மகளிடம் பொய்க் கூறியதாகவும் தெரிவித்தார்.

இது குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிக்கல்களை ஏற்படுத்துவதாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

​தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட விஜய் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அந்தப் பேச்சு அடங்கிய வீடியோக்களைச் சமூக வலைத் தளங்களிலிருந்து நீக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுக் கொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!