
செப்பாங், ஏப்ரல்-26-சிலாங்கூர் செப்பாங்கில் மக்களை நெகிழச் செய்த ஓர் உன்னத பாசப் போராட்டத்தில், ஒரு குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பிலிருந்த 30 வயதிலான மாது, அக்குழந்தையின் தாய் திடீரெனத் தலைமறைவானதால் செய்வதறியாது திகைத்தார்.
800 ரிங்கிட் மாதக் கட்டணத்திற்கு ஒப்புக் கொண்டு, 4 வயது ஆண் குழந்தையைப் Dg Che Nor Hakimah Mudah-விடம் அவனது தாய் விட்டுச் சென்றுள்ளார்.
ஆனால் ஏப்ரலில் வெறும் 100 ரிங்கிட் கட்டணமே வழங்கப்பட்டதால் அதிருப்திடைந்த பராமரிப்பாளர், குழந்தையை வந்து கூட்டிச் செல்லுமாறு அதன் தாயிடம் கூறியுள்ளார்.
என்றபோதிலும் பதிலேதும் வராததால் போலீஸில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில், அக்குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அந்தப் பாசமுள்ள பராமரிப்பாளர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்துள்ளார்.
அதாவது, குடும்பத்தாருடன் பேசி குழந்தையைத் சட்டப்பூர்வமாகத் தனது வளர்ப்புப் பிள்ளையாக ஏற்றுக் கொள்ள அவர் முன்வந்துள்ளார்.
பெற்றத் தாயும் பிள்ளையை ‘வளர்ப்புத்’ தாயிடம் கொடுக்க சம்மதம் கொடுத்துள்ளதால், சமூக நலத் துறையில் பதியு அளவுக்கு விவகாரம் முன்னேற்றமடைந்துள்ளது.
Che Nor-ரின் பெருந்தன்மைக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுக்கள் குவித்து வருகின்றன.



