Latestமலேசியா

பினாங்கில் அதிகரித்துவரும் புறாக்களின் எண்ணிக்கை; ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல்

ஜோர்ஜ் டவுன், ஜன 8 – உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்களுக்கு பினாங்கு ஒரு காந்தமாக அறியப்பட்டாலும், அம்மாநிலத்தில் புறாக்களின் எண்ணிக்கையினால்  ஆரோக்கியத்திற்கு  அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

கடந்த ஐந்து ஆண்டுகளில், தெரு உணவு மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்ற பினாங்கில்  புறாக்களின் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், 3,419 புறாக்கள் பிடிபட்டன.  அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2021 இல் தனது ஐந்து வயது மகனுக்கு  “psittacosis” அறிகுறிகள் தோன்றியதால், தனது வியாபாரத்தை சிறிது நேரத்தில் நிறுத்த வேண்டியிருந்தது, இது முக்கியமாக புறாக் கழிவுகளுடன் தொடர்புடையது என  பெருநிலத்தில்  உள்ள தனது அடுக்கு மாடி வீட்டில் குடியிருக்கும் 56  வயதுடைய  அரிசி விற்பனையாளரான  பாவுசியா சமாட்  தெரிவித்தார். 

என் மகன் எனது அங்காடிக்கடைக்கு  அருகில் இருக்கும் புறாக்களுடன் விளையாடுவதையும், அவற்றுக்கு உணவளிப்பதையும் விரும்பினான். ஒரு நாள், அவனுக்கு  திடீரென அதிக காய்ச்சல் மற்றும் இருமல் வந்து.  உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டியதாயிற்று. அவனுக்கு  மூளையில் வீக்கம் இருப்பது கண்டறியப்பட்டது. நான் மிகவும் கவலைப்பட்டதோடு அவனை கவனித்துக்கொள்வதற்காக தாம் கிட்டத்தட்ட ஒரு மாதமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டதாக பாவுசியா விவரித்தார்.    

பாதிக்கப்பட்ட பறவைகளின் உலர்ந்த கழிவுகள், சுவாச சுரப்பு மற்றும் இறகு தூசி ஆகியவற்றை உள்ளிழுக்கும் மனிதர்களுக்கு “psittacosis”  கிருமி பரவுகிறது என சுகாதார நிபுணர்கள்  கூறுகின்றனர். சிலர் புறாக்களுக்கு உணவளிப்பதை பொழுதுபோக்காகவோ அல்லது ஓய்வெடுப்பதையோ கண்டறிந்தாலும், அதில் உள்ள உடல்நல அபாயங்கள் குறித்து அவர்கள் அறிந்திருக்கவில்லை என பினாங்கு பறவை பூங்காவின் உரிமையாளரான பறவையியல் நிபுணரான  டாக்டர் ஜினோ ஓய் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!