Latestமலேசியா

பினாங்கில் நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம்; துப்புக் கொடுத்தால் 10,000 ரிங்கிட் சன்மானம்

ஜியோர்ஜ்டவுன், ஜூலை-19, பினாங்கு, தஞ்சோங் பூங்காவில் ஒரே வாரத்தில் 20-க்கும் மேற்பட்ட நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு, பத்தாயிரம் ரிங்கிட் சன்மானம் வழங்கப்படும்.

சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாகக் கைதாகி, நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்பதால், அச்சன்மானத்தை வழங்குவதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நன்கொடையாளர் சொன்னார்.

தகவல் தெரிந்தோர், விலங்குகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கான சர்வதேச உதவி அமைப்பான IAPWA-வின் பினாங்கு கிளையையோ, பினாங்கு தீவு மாநகர மன்றத்தையோ (MBPP) தொடர்புக் கொள்ளலாம்.

விஷம் வைக்கப்பட்ட நாய்களில் அப்பகுதி வாழ் மக்களில் ஒருவர் வளர்த்து வந்த husky ரக நாயும் அடங்கும்.

அநியாயமாக சாகடிக்கப்பட்ட நாய்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நூறுக்கும் மேற்பட்டோர் நேற்று ஜாலான் லெம்பா பெர்மாயில் மெழுகுவர்த்தி ஏந்திய நிகழ்வில் அந்த சன்மானத் தொகை அறிவிக்கப்பட்டது.

அதில் பங்கேற்றவர்கள், அப்படுபாதகச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டுமென வலியுறுத்தினர்.

அவை வெறும் நாய்கள் அல்ல; எங்களுக்கு குடும்ப உறுப்பினர்கள் போன்றவை. எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைத்தவையென பலர் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!