Latestமலேசியா

பினாங்கில் மண்வாரி இயந்திரத்துடன் மோதியக் கார்; ஒருவர் பலி மூவர் காயம்

ஜியோர்ஜ்டவுன், ஜூன்-9 – பினாங்கு, Bukit Dumbar அருகே Tun Dr Lim Chong Eu நெடுஞ்சாலையில் இன்று காலை கார் தடம் புரண்டு, மண்வாரி இயந்திரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஓர் ஆடவர் உயிரிழந்த வேளை, மூவர் காயமடைந்தனர்.

அதிகாலை 4.15 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில் மரணமடைந்தவர், Proton Saga காரின் முன் பக்க பயணிகள் இருக்கைக்குப் பின்னால் சிக்கிக் கொண்டதாக தீயணைப்பு மீட்புத் துறையின் பேச்சாளர் கூறினார்.

அவரின் உடலை சிறப்புக் கருவிகள் உதவியுடன் 15 நிமிடங்கள் போராடி வெளியே கொண்டு வந்த தீயணைப்பு மீட்புத் துறையினர், சவப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காரில் இருந்த ஏனைய மூவரில் இரு ஆடவர்கள் சிராய்ப்புக் காயங்களுக்கு ஆளாகினர்

இன்னொரு பெண் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!