Latestமலேசியா

பினாங்கில், ‘வட்டி முதலையைப்’ போல அடாவடியாக வீட்டிற்கு எரியூட்டிய ஆடவனுக்கு; 54 மாதச் சிறை

செபராங் பெராய், ஜனவரி 22 – பினாங்கில், வீட்டிற்கு தீ வைத்த குற்றத்தையும், மற்றவர்களின் சொத்துகளை வேண்டுமென்றே சேதப்படுத்த முயன்ற குற்றத்தையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, தொழில்நுட்ப வல்லுநராக பணிப்புரியும் ஆடவன் ஒருவனுக்கு, புக்கிட் மெர்தாஜாம் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 54 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

31 வயது செள ஹான் ஹெங் எனும் அவ்வாடவன், புக்கிட் மெர்தாஜாம், ஜூரு, தாமான் டுகுவிலுள்ள, வீடொன்றுக்கு முன்புறம், கடந்தாண்டு அக்டோபர் 15-ஆம் தேதி, மாலை மணி 4.45 வாக்கில், அக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவ்வீட்டில் வசிப்பவரும், அச்சம்பவம் குறித்து புகார் செய்தவருமான பெண் ஒருவரின், கணவன் சிங்கப்பூரில் பெற்ற கடனுதவிக்காக, செள அவ்வீட்டிற்கு தீ வைத்ததாக நம்பப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, செளக்கு 48 மாதச் சிறையும், ஐயாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்ட வேளை ; அபராதத்தை செலுத்த தவறியதால் அவன் கூடுதலாக ஆறு மாதச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!