Latestமலேசியா

பினாங்கு பாலத்திலிருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி – பொதுமக்கள் காப்பாற்றினர்

ஜோர்ஜ் டவுன், ஜூலை 11 – பொதுமக்களின் உடனடி நடவடிக்கையினால் பினாங்கு பாலத்திலிருந்து கடலில் விழுவதிலிருந்து பெண் ஒருவர் காப்பாற்றப்பட்டார். 30 வயதுடைய அந்த பெண் தனது Honda HR கறுப்பு நிற காரை நிறுத்திவிட்டு தனியாக சோகத்துடன் பினாங்கு பாலத்தின் சுவரில் அமர்ந்திருந்ததை நேற்று பிற்பகல் இரண்டு மணியளவில் பொதுமக்கள் கண்டனர். சாலையை பயன்படுத்துவோர் அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி அவரை காப்பாற்றி சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இந்த விவகாரம் குறித்து பொதுமக்களிடமிருந்து போலீசார் தகவலை பெற்றபோதிலும் நேற்று மாலைவரை அப்பெண் போலீசில் எந்தவொரு புகாரும் செய்யவில்லையென தெரிகிறது. டீ சட்டையும் , அரைகால் காற்சட்டையும் அணிந்திருந்த அப்பெண் சோகமாக இருந்ததையும் அவருக்கு பொதுமக்கள் ஆறுதல் கூறும் 50 வினாடிகளைக் கொண்ட காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!