Latestமலேசியா

பினாங்கு மலையில் கேபள் கார் திட்டத்திற்கு அங்கீகாரம் பெறப்பட்டது

ஜோர்ஜ் டவுன், மே 30 – பினாங்கு மலையில் 245 மில்லியன் ரிங்கிட் செலவிலான கேபள் கார் திட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24 ஆம் தேதி அந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டதாக அடிப்படை வசதி, போக்குவரத்து மற்றும் இலக்கவியல் குழுவுக்கான தலைவரான பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் Zairil Khir Johari இதனைத் தெரிவித்தார். பினாங்கு தீவு மாநகர் மன்றம் அமல்படுத்தும் இந்த திட்டம் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த திட்டம் தொடர்பான சமூக விளைவு மற்றும் போக்குவரத்து பாதிப்பு குறித்த மதிப்பீடுகளும் ஏற்கனவே ஆராயப்பட்டதை தொடர்ந்து இத்திட்டம் அமல்படுத்தப்படவிருப்பதாக Zairil Khir கூறினார். பல மாடிகளைக் கொண்ட கார் நிறுத்தும் வசதிக்கான கட்டிடத்தை நிர்மாணிக்கும் திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 12 ஆம்தேதி அங்கீகரிக்கப்பட்டது. Botanic Garden னில் 700 கார்களை நிறுத்தி வைக்கும் கட்டிடம் நிர்மாணிக்கப்படும் என திங்கட்கிழமையன்று பினாங்கு சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!